×

திண்டுக்கல்லில் மாவட்ட லீக் கால்பந்து போட்டிகள்

திண்டுக்கல், ஜூன் 11: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பிரிமியர் டிவிசன் போட்டியில், திண்டுக்கல் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, அனுமந்தராயன் கோட்டை லயோலா கால்பந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் டிவிசன் போட்டியில், செயின்ட் மைக்கேல் கால்பந்து அணி, செவன் டாலர்ஸ் கால்பந்து அணியை 3-11 என்ற கோல் கணக்கில் வென்றது. சச்சின் சாக்கஸ் கால்பந்து அணி, ஆர்ட்ஸ் ட்ரஸ்ட் கால்பந்து அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது டிவிசன் போட்டியில், புனித மரியன்னை அணி, செயின்ட் ஜோசப் மில்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மூன்றாம் டிவிசன் போட்டியில், எஸ்.எஸ்.எம் கால்பந்து அணி, ரேடியன்ஸ் கால்பந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. நான்காம் டிவிசன் போட்டியில், சீட்ஸ் கால்பந்து அணி, ஜி.எஸ்.ஸ்போர்ட்ஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பீலே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, அரசன் கால்பந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் மாவட்ட லீக் கால்பந்து போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : District League ,Dindigul ,Dindigul District Football Club ,Premier Division ,Dindigul Rockport Sports Club ,Anumandarayan ,Fort Loyola Football Team ,District League Football Matches ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு