×

ஆழ்வார்திருநகரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உடன்குடி, ஜூன் 11: ஆழ்வார்திருநகரியில் நாளை(12ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்ட மாதாந்திர மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (12ம் தேதி) ஆழ்வார்திருநகரி பிரிவு அலுவலகத்தில் தூத்துக்குடி மின்கிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு அவரவர் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post ஆழ்வார்திருநகரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Alwarthurnagar Udonkudi ,Alwarthurnagari ,Tiruchendoor Electricity ,Vijayasankarabandian ,Tricendoor Kota ,Alwarthunagari Division ,Reduction Meeting ,Dinakaran ,
× RELATED பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு