×

ஏரல் அருகே உப்பள தொழிலாளி தற்கொலை

ஏரல், ஜூன் 11: ஏரல் அருகே மது அருந்த மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏரல் அருகேயுள்ள மாரமங்கலம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உப்பள கூலித்தொழிலாளி முருகன் (60). இவர், கடந்த 8ம் தேதி அவரது மனைவி மாரியம்மாளிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே, விரக்தியடைந்த முருகன் வீட்டின் பின்புறம் உள்ள செட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் கதிர்வேல், ஏரல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜானகி, தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

The post ஏரல் அருகே உப்பள தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Arel ,Eral ,Uppala ,Murugan ,Maramangalam Mutharamman Koil Street ,
× RELATED ஏரல், உமரிக்காடு அரசு பள்ளிகளில்...