×

பூசாரியை தாக்கிய 3 பேர் கைது

நெய்வேலி, ஜூன் 11: நெய்வேலி டவுன்ஷிப் 16வது வட்டம் வேலுடையான்பட்டு முருகன் கோயில் அருகில் அய்யனார் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் பைக்கில் வந்த 3 பேர் கோயில் எதிரே மது அருந்திவிட்டு கோயில் வாசல் முன்பு வாட்டர் பாட்டில், கிளாஸ், முட்டை, வடை, பஜ்ஜி போன்ற பொருட்களை போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதை அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பூசாரி வினோத் குமார் கேட்டபோது பூசாரியை தாக்கி உள்ளனர். இச்சம்பவம் குறித்து பூசாரி வினோத்குமார் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் சுதாகர் உத்தரவின்பேரில் நகர போலீசார் 3 பேரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் நெய்வேலி அடுத்த வடக்கு மேலூர் தெற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் ஆனந்தவேல் (23), கோபால் மகன் லட்டு (எ) அருண் (22), சக்கரபாணி மகன் பாடலீஸ்வரன் (23) என தெரிந்தது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பூசாரியை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Neyveli Township 16th Circle Veludayanpattu ,Murugan Temple ,Ayyanar Temple ,
× RELATED நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில்...