×

சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு: ஐஐடி மெட்ராஸ், நாசா ஆராய்ச்சியாளர்கள் கூட்டு நடவடிக்கை

சென்னை: சென்னை ஐஐடி செய்திக்குறிப்பு: ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கும் பூமியில் வசிப்போருக்கும் இதனால் முக்கிய பயன்பாடுகள் கிடைக்கப் பெறலாம்.

குறிப்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேற்பரப்புகளில் இருக்கும், பொதுவான நோய்க்கிருமிகளான என்டெரோபாக்டர் (Enterobacter bugandensis) மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், எதிர்பாராத சூழலில் நோய்க்கிருமிகள் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும் விண்வெளிச் சூழலில் நுண்ணுயிரிகளின் நோய்க்கிருமித் திறனை ஆராய வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘இதுபோன்ற ஆய்வுகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் சிக்கலான தொடர்புகளை அவிழ்க்க உதவிகரமாக இருக்கும். எதிர்கால நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்கும் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் புதிய எதிர்கொள்ளும் உத்திகளை வடிவமைக்க புதிய நடவடிக்கை உதவும். இதனால் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

The post சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு: ஐஐடி மெட்ராஸ், நாசா ஆராய்ச்சியாளர்கள் கூட்டு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : International Space Station ,IIT Madras ,NASA ,Chennai ,IIT ,Earth… ,International Space Centre ,