×

பட்டா மாறுதலை ரத்து செய்யகோரி கலெக்டரிடம் பெண் மனு

தர்மபுரி, ஜூன் 11: பாலக்கோடு தாலுகா, ஜிட்டாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி செல்வி (48). இவர் தனது உறவினர்களுடன், நேற்று கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஜிட்டாண்டஅள்ளி கிராமத்தில், குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனது தந்தை வேலன் என்ற முனுசாமி, எனக்கு கடந்த 2012ம் ஆண்டு, தான செட்டில்மென்டாக ராயக்கோட்டையில் உள்ள விவசாய நிலத்தை வழங்கினார். அந்த நிலத்தில், தற்போது விவசாயம் செய்து வருகிறோம். எனது பெயரில் வழங்கப்பட்ட தான செட்டில்மென்ட் பத்திரத்தை, எனது தந்தை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி கிரயம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, பாலக்கோடு பகுதியை சேர்ந்த சிலர், எனது பெயரில் உள்ள நிலத்தை, தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர். எனவே, மோசடியாக மாறுதல் செய்த பட்டாவை ரத்து செய்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post பட்டா மாறுதலை ரத்து செய்யகோரி கலெக்டரிடம் பெண் மனு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jayapal ,Jitandaalli ,Palakodu taluk ,Collector ,Shanthi ,Jitandaalli village ,Velan ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு