×

மெரினா கடற்கரையில் திருட்டு; 2 குற்றவாளிகளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், மெரினா கடற்கரையில் திருடியபோது 2 குற்றவாளிகளை சம்பவயிடத்திலே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். மெரினா கடற்கரை உயிர் காக்கும் பிரிவில் (Anti Drowning Unit) பணிபுரியும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் அணி (மணிமுத்தாறு) காவலர்கள் திரு.N.அருண்குமார் (க.எண்.7191), திரு.N.ஆதித்யராஜன் (க.எண்.7137) ஆகிய இருவரும் நேற்று (09.06.2024) காலை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை பின்புறம் பணியிலிருந்த போது, அங்கு கடற்கரை மணற்பரப்பை சுற்றி பார்க்க வந்த நபர் ஒருவரின் பேக்கை, அங்கு வந்த சந்தேகத்திற்குரிய இருவர் திருடிக்கொண்டு தப்பி ஓடியபோது, இதனை கவனித்த மேற்படி பணியிலிருந்த காவலர்கள் இருவரும் மேற்படி 2 நபர்களையும் மடக்கிப்பிடித்து திருடிய பையுடன் D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரித்த போது 1.சுனில், வ/26, த/பெ.மூர்த்தி, சிக்மங்களூர், கர்நாடகா மாநிலம் 2.ஹர்ஸத், வ/22, த/பெ.ரஹிம், சிக்மங்களூர், கர்நாடகா மாநிலம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி இருவரும் சேர்ந்து மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்த 1.மோகன்னா, ஆ/26, த/பெ.கைலாஸ், ஆந்திரமாநிலம் என்பவரது செல்போன் அடங்கிய பையை திருடியது தெரியவந்தது. மேலும் இவர்கள் இதற்கு முன்பு 08.06.2024 அன்று 2.ஜாஸ்மின், பெ/22, த/பெ.அக்பர், ஆயிரம் விளக்கு, சென்னை என்பவரின் கைப்பையையும் திருடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி நபர்களிடமிருந்து 2 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள், 1 பேக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி 2 குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து திருடிய பொருட்களுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் அணி காவலர் திரு.அருண்குமார் என்பவரை இன்று (10.06.2024) நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

 

The post மெரினா கடற்கரையில் திருட்டு; 2 குற்றவாளிகளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு! appeared first on Dinakaran.

Tags : MARINA BEACH ,STATION ,CHENNAI METROPOLITAN POLICE COMMISSIONER ,Marina ,Beach ,Saving Unit ,Unit ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?