×

கடமலைக்குண்டு அருகே பரபரப்பு தனியார் பஸ்சிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்த பெண்

*இணையத்தில் வீடியோ வைரல்

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே தனியார் பஸ்சிலிருந்து தவறி விழுந்த பெண் படுகாயமடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவை சேர்ந்த நாகராஜன் மனைவி தீபலட்சுமி (46). இவர்கடந்த 6ம் தேதி அக்குபஞ்சர் சிகிச்சை செய்வதற்காக கடமலைக்குண்டுவில் இருந்து ஆண்டிபட்டிக்கு தனியார் பஸ்சில் சென்றுள்ளார். பஸ்சின் முன்பக்க படிக்கட்டிற்கு அருகில் நின்றபடியே பயணித்தார். கொம்புக்காரன் புலியூர் அருகே பஸ் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து தவறி சாலையோரம் விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த தீபலட்சுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பஸ்சில் இருந்து தீபலட்சுமி தவறி விழுந்தது பஸ்சில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தீபலட்சுமியின் தாயார் பிரேமலீலா கொடுத்த புகாரின்பேரில் தனியார் பஸ் டிரைவர் ரஞ்சித்குமார் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடமலைக்குண்டு அருகே பரபரப்பு தனியார் பஸ்சிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Kadamalaikundu ,Varusanadu ,Nagarajan ,Deepalakshmi ,Kadamalaikundu, Theni district ,
× RELATED பாலூத்து கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டி கோரிக்கை