×

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வரும் 28, ஜூலை 3ம் தேதி பாராட்டு விழா: நடிகர் விஜய் அறிவிப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பரிசுகள் வழங்கப்படும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி விஜய்”, 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த “10ம் வகுப்பு மற்றும் 12ம்” வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாகப் பாராட்ட உள்ளார்.

முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி. ராணிப்பேட்டை, தஞ்சாவூர். திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். “தளபதி விஜய்”, மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கெளரவிக்க உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வரும் 28, ஜூலை 3ம் தேதி பாராட்டு விழா: நடிகர் விஜய் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu Vetri Kazhagam ,Tamilaka Vetri Kazhagam ,President ,Thalapati Vijay ,
× RELATED மகனை அடித்துவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி