×

மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம் என 4 கிமீ தூரம் ஸ்கேட்டிங் செய்து சிறுவன் விழிப்புணர்வு

 

தஞ்சாவூர், ஜூன் 10: மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து மூன்றரை வயது சிறுவன் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் ரஞ்சித் குமார். இவர் மரம் வளர்ப்போம், மண் வளம் காப்போம் என ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த சிறுவன் தஞ்சாவூர் ரகுமான் நகர் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் 40 நிமிடங்களில் கடந்து ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு ஸ்கேட்டிங் செய்த சிறுவனை சுற்றி இருந்தவர்கள் உற்சாகப்படுத்தி பாராட்டினர்.

The post மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம் என 4 கிமீ தூரம் ஸ்கேட்டிங் செய்து சிறுவன் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Ranjith Kumar ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...