×

கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல்

 

கந்தர்வகோட்டை, ஜூன் 10: கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் பெருவேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சாகேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த 8ம் திருமுறை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய மூலவருக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பஜனை பக்தர்கள் செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டை, நெய்வேலி, திருவோணம், கறம்பக்குடி, போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பளாராக விருதுநகர் சம்பந்தமூர்த்தி ஆடியார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அனைந்து அடியார்களுக்கும் ஆறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

அனைந்து ஏற்பாடுகளையும் கந்தர்வகோட்டை சிவனாடியார்கள் செய்திருந்தனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்று தேர்ச்சி அடைந்து நல்ல நிலைக்கு உயர வேண்டுமென பிரார்த்தனை செய்தனர்.

The post கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvasaka Temple ,Kandarvakota Sivan Temple ,Kandarvakota ,Thiruvasakam ,Paruvelvi ,Manikavasakar ,Amman Udhanura Abadsakeswarar ,Temple ,Kandarvakota City, Pudukkottai District ,Thiruvaska Murodal ,Kandarvakota Shivan Temple ,
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...