பெரம்பலூர், ஜூன் 10: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரும் என 2 பேர் மீது குண்டர் தடுப் புக்காவல் சட்டம் பாய்ந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு மற்றும் கொலை, கொள்ளை என குற்ற செயல்களில் ஈடு பட்டு வந்த சரித்திர பதி வேடு குற்றவாளியான, பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமம் கல்பாடி ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் கலையர சன் (24) மற்றும் தொடர்ந்து சட்ட விரோத மாக கஞ்சா,
கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த குன் னம் தாலுக்கா, லெப்பைக் குடிகாடு, ஜமாலியா நகர் பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் மகன் நியாஷ் அகமது (31) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், குற்றவாளிகளான கலையரசன், நியாஷ் அஹமது ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ், திருச்சி மத்திய சிறையில் அடை க்க உத்தரவிட்டார். குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்ட போலீசாரை மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி பாராட்டினார்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.