×

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 

காரைக்கால்,ஜூன் 10: பி.ஆர்க் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார். நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்பான பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு புதுச்சேரியை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2024-25ம் கல்வியாண்டுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வருகிற 22ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

ஏற்கனவே நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் என்ஏடிஏ/ ஜெஇஇ மதிப்பெண் அடிப்படையில் தங்களின் தகுதியை உறுதிசெய்த பிறகு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்க்கவும் என்று தெரிவித்துள்ளார்.

The post பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puducherry Sendak ,Aman Sharma ,Puducherry ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!