×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15,491 தேர்வாளர்கள் குரூப்-4 தேர்வு எழுதினர்

 

நாகப்பட்டினம்,ஜூன்10: நாகப்பட்டினத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில், 15,491 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 824 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொகுதி நான்கில் அடங்கிய பணிகளுக்கான தேர்வு நேற்று நடந்தது. தேர்வு நடைபெறும் மையம் நாகப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய இடங்களில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். இதற்காக நாகப்பட்டினத்தில் 84 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 315 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 15 ஆயிரத்து 491 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 824 பேர் தேர்வு எழுதவில்லை.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15,491 தேர்வாளர்கள் குரூப்-4 தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Tamil ,Nadu ,service ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் கறவை மாடு கடன்பெற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது