×

பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு விருது

 

விருதுநகர், ஜூன் 10: விருதுநகரில் மத்திய, மாநில எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற 36ம் ஆண்டு கல்வி திருவிழாவில் அரசுப் பள்ளியில் 10, பிளஸ் 2 வகுப்பில் உயர்மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவியர் 60 பேருக்கு பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த 36 ஆண்டு காலமாக கல்வித்திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர், மாநில தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாளமுத்தரசு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் 550 மதிப்பெண்கள் மற்றும் பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண்கள் பெற்ற 53 மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட தலைவர்கள் வேலாண்டி, ராஜபேகன், மாவட்ட அமைப்பாளர் சோனைமுத்து மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Central, State SC ,ST Government Employees and People's Association ,Dinakaran ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...