×

42 போலீசாருக்கு எஸ்எஸ்ஐ பதவி உயர்வு

 

சிவகங்கை, ஜூன் 10: சிவகங்கை மாவட்டத்தில் எஸ்எஸ்ஐயாக 42 போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன் 5 உள்பட மொத்தமுள்ள 49 போலீஸ் ஸ்டேசன்களில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட போலீசார் பணி செய்து வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாராக 10ஆண்டுகள், முதல் நிலை போலீசாராக 5ஆண்டுகள், தலைமை போலீசாராக 10ஆண்டுகள் என 25ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 25 ஆண்டுகள் தண்டனையின்றி பணியாற்றிய மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும் தலைமை போலீசார் 39பேர், ஆயுதப்படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3பேர் என 42பேர் எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி துரை இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

The post 42 போலீசாருக்கு எஸ்எஸ்ஐ பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,SSI ,Women's Police Station 5 ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED சிவகங்கை அருகே சாலையோர இரும்பு தடுப்புகள் மாயம்