×

கோயில் முன்பு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்கள்

 

ராமேஸ்வரம், ஜூன் 10:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மேற்கு கோபுர நுழைவாயிலில் பாலசுப்பிரமணியர் சுவாமி முருகன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலும் தினசரி உள்ளூர் பக்தர்களே அதிகளவில் தரிசனம் செய்து செல்வது வழக்கம். சன்னதி முன் உள்ள சாலையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக அதிக இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். டூவீலர்களின் ஆக்கிரமிப்பால் அந்த வழியாக செல்பவர்கள் எப்போதும் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மேலவாசல் முருகன் கோயில் முன்பு பக்தர்களுக்கு இடையூறாக இருந்த டூவீலர்கள் நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோயில் முன்பு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்கள் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Balasubramaniar Swamy Murugan shrine ,Rameswaram Ramanathaswamy temple ,
× RELATED இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட...