×

முள்ளக்காடு பகுதியில் மீனவரை தாக்கிய இருவர் கைது

ஸ்பிக்நகர், ஜூன் 10: முள்ளக்காடு நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எடிசன் (53). மீனவரான இவர் முத்தையாபுரம் டாஸ்மாக் அருகே பாட்டில் எடுத்து கொண்டிருந்தபோது அங்கு வந்த முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த கணேசன்(53), ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் சுகுமார் (22) உள்ளிட்டோர் இவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த எடிசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட கணேசன், சுகுமாரை கைது செய்தனர்.

The post முள்ளக்காடு பகுதியில் மீனவரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mullakkad ,SPIGNAGAR ,Edison ,Nehruji Nagar ,Ganesan ,Mullakkadu Devi Nagar ,Murugan ,Rajeev Nagar ,Tasmak ,Muthiyapuram ,
× RELATED தூத்துக்குடியில் `டிசி’ வாங்க சென்ற மாணவர் விபத்தில் பரிதாப பலி