×

கடையம் அருகே சணல் பொருட்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி

கடையம், ஜூன் 10: கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து 13 நாட்கள் சணல் பொருட்கள் தயாரித்தல் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது. தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் இரண்டு ஒன்றிய அரசு சான்றிதழ்களை வழங்கினார். கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயக்குனர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனுசுயா சைலப்பன் நன்றி கூறினார்.

The post கடையம் அருகே சணல் பொருட்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Indian Overseas Bank and Rural Self-Employment Training Institute ,Dharmapuram Madam Panchayat ,Dinakaran ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது