×

அதிக விலைக்கு மது விற்ற 4 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 10: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டி பஸ் நிறுத்த பகுதியில், ஏ.பள்ளிப்பட்டி எஸ்ஐ முனுசாமி உள்ளிட்ட போலீசார், மது விலக்கு சம்மந்தமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாப்பம்பாடி அண்ணா நகரை சேர்ந்த பழனிச்சாமி (25), மணிகண்டன் (23), மாது (65), குணசேகரன் (47) ஆகியோர், அனுமதி இன்றி அதிக விலைக்கு விற்பனை செய்ய மதுபாட்டில்களை சாக்கு பையில் வைத்திருந்தனர். இதயைடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post அதிக விலைக்கு மது விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,A. Pallipatti ,SI Munusamy ,H. Budhupatti ,Pappirettipatti, Dharmapuri district ,Palanichamy ,Pappambadi Anna Nagar ,Manikandan ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது