×

பைக் மீது டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்

வில்லியனூர், ஜூன் 10: வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் அன்னை சுப்புலட்சுமி நகரை சேர்ந்தவர் ேமாகன் (50). கூலிதொழிலாளியான இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று மதியம் 2 மணியளவில் இவரும், இவரது நண்பர் கூடப்பாக்கம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரும் பைக்கில் பத்துக்கண்ணு நோக்கி சென்றுள்ளனர். முருகன் பைக் ஓட்ட மோகன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். கூடப்பாக்கம் ஊருக்குள் இருந்து மெயின்ரோட்டில் இடது பக்கமாக வளையும் போது வில்லியனூர் பகுதியில் இருந்து பத்துக்கண்ணு நோக்கி சென்ற பெட்ரோலியம் டேங்கர் லாரி திடீரென முருகன் ஓட்டி வந்த பைக் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் மோகன் வலது பக்கமாகவும், முருகன் இடது பக்கமாகவும் விழுந்துள்ளனர். அப்போது ேமாகன் தலை மீது டேங்கர் லாரி மோதியதில் மோகன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் வில்லியனூர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அழகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேஸ் மற்றும் போலீசார், படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மோகன் உடலை மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய பெட்ரோலியம் டேங்கர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் சீர்காழி பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என்பவர் வில்லியனூர் பகுதியில் இருந்து திருக்கனூர் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் இறக்குமதி செய்வதற்காக டேங்கர் லாரியை ஓட்டி சென்ற போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு மோகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Willianur ,Yemakan ,Annai Subbulakshmi ,Koodapakkam ,Pushpa ,Mantoppu ,
× RELATED கேரளாவில் இருந்து வில்லியனூருக்கு...