×

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட விவசாயிக்கு வெட்டு

குமாரபுரம், ஜூன் 10: குமாரபுரம் அருகே மணலிக்கரை கிறிஸ்துபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (65). விவசாயி. இவரது மகள் வீடு அமைந்துள்ள பகுதியில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (60) ஆபாச சைகைகளை காட்டி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மாலையில் வீட்டுக்கு வந்த மகள் நடந்ததை தந்தையிடம் கூறினார்.இதையடுத்து மோகன் தாசிடம் என்னுடைய மகளிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று ஆல்பர்ட் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த மோகன் தாஸ் வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியால் ஆல்பர்ட்டை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட ஆல்பர்ட் தப்பித்து ஓடினார். ஆனால் ஆல்பட்டை விரட்டி விரட்டி மோகன்தாஸ் வெட்டினார். இதில் கால்,தோள்பட்டை என 3 இடங்களில் வெட்டு விழுந்தது. கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர , மோகன் தாஸ் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயம் அடைந்த ஆல்பர்ட்டை ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட விவசாயிக்கு வெட்டு appeared first on Dinakaran.

Tags : Kumarapuram ,Albert ,Manalikkarai Christhapuram ,Mohandas ,Dinakaran ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...