×

திருப்பரங்குன்றத்தில் தண்டபாணி கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் திரண்டு வழிபாடு

திருப்பரங்குன்றம், ஜூன் 10: திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் உள்ள தண்டபாணி கோயிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் உள்ளது திருக்கூடல் மலை. இந்த மலையின் மீது தண்டபாணி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 6ம் தேதி கனபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இந்த புனிதநீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசத்தில் அபிசேஷம் செய்யப்பட்டது. பின்னர் தண்டபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post திருப்பரங்குன்றத்தில் தண்டபாணி கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் திரண்டு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Dandapani Temple ,Tiruparangunram ,Dandapani ,Temple ,Thirukoodal Hill ,Dandapani Temple Kumbabhishekam ,
× RELATED குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு