×

பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரம் போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

வாடிகன்: பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை விரைந்து செய்ய வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுததி உள்ளார். வாடிகன் சிட்டியில் நேற்று ஆசிர்வாத கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ், “இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அனைத்து வழிகளிலும் சர்வதேச நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை யாரும் தடுக்க கூடாது.
பாலஸ்தீனர்கள், இஸ்ரேலியர்களின் நலன்களுக்காக முன்வைக்கப்பட்ட மற்றும் இருதரப்பிலும் உள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்கான முன்மொழிவுகளை ஏற்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

The post பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரம் போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,Vatican ,Palestinians ,Vatican City ,Gaza ,Israeli war ,
× RELATED இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப்...