×

சீனாவில் குவாண்டாங் மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்: நூலிழையில் உயிர் பிழைத்த நபர்

சீனா: சீனாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தின் மீது நடந்து சென்ற நபர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெய்சோ நகரில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடும் ஓடும் நிலையில் அதன் மேல் உள்ள பாலத்தில் குடையுடன் நபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அதே பாலத்தில் மீண்டும் திரும்பி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பாலம் வெல்ல நீரில் அடித்து செல்லப்பட்டது. ஒரு சில வினாடிகள் தாமதமாக இருந்தால் அந்த நபர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது.

The post சீனாவில் குவாண்டாங் மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்: நூலிழையில் உயிர் பிழைத்த நபர் appeared first on Dinakaran.

Tags : Guangdong province ,China ,Guangdong province, China ,Meizou ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு