×

சீனா, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நடுக்கடலில் மோதல்

தைபெய்: தென் சீன கடற்பகுதியில் பல்வேறு நாடுகளால் உரிமைகோரப்படும் சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவு அருகே சீனாவின் கப்பலும், பிலிப்பைன்சுக்கு சொந்தமான வணிக கப்பலும் நேற்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக சீனாவின் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இரு நாட்டு கப்பல்களும் மோதிக்கொண்டதுக்கு பிலிப்பைன்ஸ் தான் காரணம் என சீன கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஆனால் சீனாவின் குற்றச்சாட்டை பிலிப்பைன்ஸ் ராணுவம் மறுத்துள்ளது. பிலிப்பைன்சின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் சீனா கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைவது தான் முக்கிய பிரச்னையாகும் என்றும் தெரிவித்துள்ளது.

The post சீனா, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நடுக்கடலில் மோதல் appeared first on Dinakaran.

Tags : Mediterranean Taipei ,Spratly Islands ,South China Sea ,China ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா...