×

அடகு கடை சுவரில் துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் தனியார் நகை அடகு கடை உள்ளது. மதகுபட்டியை சேர்ந்த பாண்டித்துரை உள்பட 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடையின் பின்புற சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து பாண்டித்துரைக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது கடையின் இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். கொள்ளையர்கள் பயன்படுத்திய கையுறைகளை அங்கேயே கழற்றி எறிந்து விட்டு சென்றுள்ளனர். கொள்ளை நடந்த தகவல் அறிந்து நகை அடகு வைத்தவர்கள் கடை முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடகு கடை சுவரில் துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Madhagupatti ,Panditurai ,Pawnshop ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...