×

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

செய்யாறு: செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். மாடு தரகு வியாபாரி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் பரத்(9), சந்தோஷ்(7). ஐந்து மற்றும் 2ம் வகுப்பு படித்து வந்தனர். கோயில் திருவிழாவுக்காக வந்திருந்த ராமதாசின் அக்கா வாணியின் மகன் சாய்சரணுடன் (12), பரத், சந்தோஷ் ஆகியோர் நேற்று மாலை அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது, சிறுவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்த கிராம இளைஞர்கள் குளத்தில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை சடலமாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள்குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Ramadas ,Nedumbrai ,Seiyaru taluk ,Tiruvannamalai district ,Bharat ,Santhosh ,
× RELATED குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3...