×

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு கிலோ தர்பூசணி ரூ10க்கு விற்பனை

தஞ்சாவூர், ஜூன் 9: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் ஒரு கிலோ தர்பூசணி ரூ. 10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடைகால வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை வாங்கி பருகுவார்கள். குறிப்பாக தர்பூசணிகளை விரும்பி வாங்கி உண்பார்கள். தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, நீர்சத்தும் நிறைந்ததாகும். கோடை காலம் என்பதால் தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அறியானிப்பட்டி கிராமத்திலிருந்து தர்பூசணி கொண்டுவரப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாலையோர கடைகளில் தர்பூசணியை சிறிய துண்டுகளாக்கி விற்பனை செய்கின்றனர். அந்த வழியாக செல்பவர்கள், தர்பூசணி துண்டுகளை வாங்கி, அதன் மீது மிளகாய் பொடி தூவி ருசித்து சாப்பிடுகின்றனர். கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் தர்பூசணிகளை வாங்கி விரும்பி சாப்பிடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு கிலோ தர்பூசணி ரூ10க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thanjavur Medical College Road ,Thanjavur ,Thanjavur Government Medical College Hospital Road ,Thanjavur Medical College ,Road ,Dinakaran ,
× RELATED மனித உரிமை செல் அமைப்பு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு