×

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தோர் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், ஜூன்9: பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும், உள்நாட்டு மீன்வளர்ப்பை ஊக்குவித்திடவும், மீன் உற்பத்தியை பெருக்கிடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானிய உதவியில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50 டன் திறனுள்ள பனிக்கட்டி நிலையம் அமைக்க மொத்த தொகை ரூ.150 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (ரூ.60 லட்சம்) மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியம்(ரூ.90 லட்சம்) வரை வழங்கப்படுகிறது. உவர்நீர்மீன் (கொடுவா மீன்) வளர்ப்பிற்கு புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் 1 எக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவு ரூ.14 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (ரூ.5.60 லட்சம்). மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியம் (ரூ.8.40 லட்சம்) வரை வழங்கப்படுகிறது.

பயோபிளாக் குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 1 அலகின் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (ரூ.7.20 லட்சம்) மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியம் (ரூ.10.80 லட்சம்) வரை வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்வதற்கு 1 அலகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.7.50 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (ரூ.3 லட்சம்) வரை வழங்கப்படுகிறது. ஆழ் கடல் மீன்பிடி படகு கட்டும் திட்டத்தில் 1 படகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.120 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (ரூ.48 லட்சம்) மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியம் (ரூ.72 லட்சம்) வரை வழங்கப்படுகிறது.

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தோர் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Janitam Varghese ,Tamil Nadu ,
× RELATED சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு...