×

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு: ஏராளமானோர் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 9: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வைகாசி மாதத்தில் கடைசி சனிக்கிழமையையொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு: ஏராளமானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Srinivasa Perumal Temple ,Srivilliputhur ,Thiruvannamalai ,Tiruvannamalai ,South Tirupati ,Sami ,Srinivasa Perumal ,Temple ,
× RELATED அதிமுக நிர்வாகி அடித்து கொலை