×

தூத்துக்குடி பகுதியில் நாளை மின்தடை

தூத்துக்குடி, ஜூன் 9:தூத்துக்குடியில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி நகர் மின்விநியோகம் செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி டவுண் மற்றும் சிப்காட் துணை மின்நிலையத்தில் உள்ள சிவன் கோவில் மற்றும் மருத்துவ கல்லூரி மின் தொடர்களில் நாளை (10ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, ரெங்கநாதபுரம், ரகுமத்துல்லாபுரம், மாதாகோவில்தெரு, எட்டையபுரம் ரோடு தொடர்ச்சி, கல்லூரிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Thoothukudi Nagar Power Distribution ,Kannan ,Thoothukudi Town ,Cipkat Sub-Power Station ,Sivan Temple ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...