×

பைக்கிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ஜி.ஹெச். ஊழியர் சாவு

கேடிசி நகர், ஜூன் 9: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே ஊர்மேலகியானைச் சேர்ந்தவர் கோவிந்தன் (74). நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 1ம் தேதி புதிய பைக்கை எடுத்துக்கொண்டு அதற்கு நம்பர் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றார். அப்போது எதிரே லோடு ஆட்டோ வந்ததால் பதறியபடி பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை அவர் இறந்தார். கோவிந்தனுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post பைக்கிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ஜி.ஹெச். ஊழியர் சாவு appeared first on Dinakaran.

Tags : Former ,GH ,KDC Nagar ,Govindan ,Urmelakiyan ,Kadayanallur, Tenkasi district ,Nellai Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் இருந்து வெளியேற்றி...