×

வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல்

பணகுடி, ஜூன் 9: வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளி வளாகத்தில் மாணவர் கல்வி மேம்படுதல், உலக நன்மை மக்கள் வளம் பெறுதல் போன்றவைகளுக்காக திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இதனை சைவ சித்தாந்த பேராசிரியர் வித்யாநிதி சிவ ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிரகாம்பெல், திவாகரன் ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக விக்னேஸ்வர வழிபாடு நடந்தது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை அப்பர் அருட்பணி மன்றகுழு தலைவர் சிவ ஈஸ்வரன், வடக்கன்குளம் திருவாசக குழு தலைவர் தமிழரசி, குமரி மாவட்டம் சுசீந்திரம் 63 திருவாசக குழு சிவ ஆடலரசு, கடையநல்லூர் ஆருத்ரா திருவாசகர் குழு பிரேமா, பெருங்குடி திருவாசக சைவ சபை குழு தலைவர் வாலாம்பாள், பணகுடி ராமகிருஷ்ண பரமஹம்சர் திருவாசக முற்றோதல் குழு சிவ சாந்தா, ராதாபுரம் திருவாசக குழு சிவராஜேஸ்வரி, இருக்கன்துறை திருவாசக பக்தர்கள் சங்க சிவகாந்தி சுப்பையா, சுப்புலட்சுமி, தெரிசனங்கோப்பு திருவாசகக்குழு சிவ ஐயப்பன், நாகர்கோவில் திருவாசக முற்றோதுதல் குழு தலைவர் சிவானி, பூதப்பாண்டி திருவாசகம் குழு தலைவர் சிவமுருகன் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

The post வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvasakam ,Vadakankulam ,SAV ,school ,Panagudi ,Thiruvasakam strike ,Vidyanidi Siva Jayachandran ,Shaiva Siddhanta ,Graham Bell ,
× RELATED திருவாசகத்தில் சமயநெறியும் பக்தி நெறியும்