×

வாரச்சந்தையில் மரக்கன்றுகள் நடவு

போச்சம்பள்ளி, ஜூன் 9: கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, உபரி நீர் நீடிப்பு இடதுபுற கால்வாய் பயன் பெறுவோர் சங்கம் சார்பில், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சிவகுரு தலைமை தாங்கினார். பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலா முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் பாசன விவசாய சங்க தலைவர் சேரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, பொற்கோவன், சதீஷ், சசி, சக்தி, தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முத்து நன்றி கூறினார்.

The post வாரச்சந்தையில் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Krishnagiri KRP Dam ,Surplus Water Extension Left Canal Beneficiaries Association ,Sangha ,President ,Sivaguru ,Parkur ,Regional Development Officer ,Kala ,Dinakaran ,
× RELATED அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம்