×

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 33 பேருக்கு ₹10 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில், ஜூன் 9: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தியிருந்தனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிஷன் பகுதிகளில் இந்த வாகன சோதனை நடைபெற்றது. இதில் விதிகளுக்கு புறம்பாக வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. விபத்துக்களை தடுக்கும் வகையில் எஸ்.பி உத்தரவின் பேரில் தற்போது தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post குடிபோதையில் வாகனம் ஓட்டிய 33 பேருக்கு ₹10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari district ,Kanyakumari ,Takkalai ,Kulachal ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?