×

அரசு கலை அறிவியல்கல்லூரியில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நாளை தொடக்கம்

நாகர்கோவில், ஜூன் 9: நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு கல்லூரி கல்வி இயக்குநரின் ஆணைப்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பி.ஏ இளங்கலை, பி.எஸ்சி இளம் அறிவியல், பி.காம் இளம் வணிகவியல், பிபிஏ ஆகிய பாட பிரிவுகளுக்கு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு மாற்றுதிறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு மே 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் முதல்கட்ட பொது கலந்தாய்வானது ஜூன் 10ம் தேதி அன்று வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும், ஜூன் 11ம் தேதி அன்று கணினி அறிவியல், கணிதவியல், புள்ளியியல், விலங்கியல் மற்றும் இயற்பியல் பாட பிரிவுகளுக்கும், ஜூன் 12ம் தேதி அன்று வரலாறு, பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாட பிரிவுகளுக்கும் நடைபெறும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு கலை அறிவியல்கல்லூரியில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Government College of Arts and Sciences ,Nagercoil ,Nagercoil Government Arts and Science College ,Principal ,Prakashi Aruljyoti ,Tamil Nadu Government ,of College ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் 2ம்...