×

நம்பியூர் குமுதா பள்ளியில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவ,மாணவிக்கு பாராட்டு

கோபி,ஜூன்9: கோபி அருகே உள்ள நம்பியூரில் செயல்பட்டு வரும் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 720க்கு 659 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். குமுதா பள்ளியில் இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டதில் பள்ளி மாணவன் ஆர்.ஜி.நவீன் 720க்கு 659 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் பிளஸ் 2வில் 600க்கு 590 மதிப்பெண்களும், பிளஸ்-1ல் 591 மதிப்பெண்களும், 10ம் வகுப்பில் 498 மதிப்பெண்களும் பெற்று இருந்த நிலையில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றார்.அதே போன்று ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 94.35 சதவீத பர்சென்டைல் பெற்றுள்ள நிலையில் தேர்வு முடிவிற்கு காத்திருக்கிறார்.

பல்வேறு திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இதுவரை 3 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையும் மாணவர் நவீன் பெற்று உள்ளார். அதே போன்று பள்ளி மாணவி எஸ்.பீனா, நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 592 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அதே போன்று கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய இப்பள்ளி மாணவி டி.வர்ஷா, சர்வதேச மற்றும் தேசிய கடற்கரை கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று ரூ.10 லட்சம் பரிசு பெற்றதுடன், தமிழ்நாடு அரசு வழங்கும் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவ படிப்பிற்கான 7 இடங்களில் ஒரு இடத்தை பிடித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார்.

நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம்,செயலாளர் டாக்டர்.அரவிந்தன், இணைச்செயலாளர் டாக்டர். மாலினி அரவந்தன்,முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி,விளையாட்டு இயக்குநர் பாலபிரபு மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

The post நம்பியூர் குமுதா பள்ளியில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவ,மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nambiur Kumuda School ,Gobi ,Kumuda Matric Higher Secondary School ,Nambiur ,Kumuda School ,Dinakaran ,
× RELATED கோபி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு