×

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி; நேருவுக்கு பிறகு மோடி மட்டும் தானா?.. காங்கிரஸ் கட்சி விளக்கம்


புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் ஆனது மோடி மட்டுமே என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. நேரு 1952ல் 364 இடங்களையும், 1957ல் 371 இடங்களையும், 1962ல் 361 இடங்களையும் பெற்று தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் ஆனவர். ஒவ்வொரு முறையும் 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தவர். ஆனாலும் அவர் முழுமையான ஜனநாயகவாதியாக இருந்து மிகவும் கவனமாக நாடாளுமன்றத்தை வழிநடத்தி சென்றார்.

நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக அல்லது 3 முறையோ பதவியேற்கும் ஒரே பிரதமர் மோடி என்பது உண்மையல்ல. வாஜ்பாய் 1996, 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்திரா காந்தி 1966, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் 4 முறை பிரதமராக பதவியேற்றார். 2024 மக்களவை தேர்தலில் மோடியின் பரிதாபகரமான செயல்திறனை நியாயப்படுத்த அவரது அடிபொடிகள் இதுபோன்ற எப்படிப்பட்ட தம்பட்டத்தையும் அடிப்பார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பாஜவுக்கு கிடைத்தது தார்மீக தோல்வி, அதுவே காங்கிரசுக்கு கிடைத்தது மனதளவில் ஊக்கமளிக்கும் நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி; நேருவுக்கு பிறகு மோடி மட்டும் தானா?.. காங்கிரஸ் கட்சி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Nehru ,Congress party ,New Delhi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,Jawaharlal Nehru ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த...