×

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய மாணவர்கள் சடலம் மீட்பு: மகாராஷ்டிரா எடுத்து வர நடவடிக்கை


ஜல்கான்: ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 இந்திய மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் 5 பேர் வோல்கோவ் ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு ஆற்றில் இறங்கி விளையாடியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர்கள் நீரில் மூழ்கினார்கள். இந்நிலையில் ஒரு மாணவி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் சடலங்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அன்றைய தினமே இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்கள் 4 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது குறித்து மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்களில் 2 பேரின் சடலங்கள் 4ம் தேதி மீட்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு சடலங்கள் நேற்று காலை மீட்கப்பட்டது. மாணவர்களின் சடலங்களை இந்தியா கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் சடலங்கள் மும்பை கொண்டுவரப்பட்டு பின்னர் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய மாணவர்கள் சடலம் மீட்பு: மகாராஷ்டிரா எடுத்து வர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Russia ,Maharashtra ,Jalgaon ,Maharashtra government ,Novgorod University ,Velikiy Novgorod, Russia ,Volkov River ,Dinakaran ,
× RELATED மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில்...