×

கடலூர் முதுநகர் சவுடாம்பிகை அம்மன் கோயிலில் உடலில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

கடலூர்: கடலூர் முதுநகரில் பர்வதவர்த்தினி சமேத ராமனாதீஸ்வர சவுடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் அம்மன் பண்டிகை உற்சவம் விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் இருந்து புறப்பட்ட சக்தி கலசம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது . இதையடுத்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு ஜோதி தரிசனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் நிர்வாக அறங்காவலர் ஜெயபாலன் நெடுஞ்செழியன் அழகேசன் நாட்டாமைகள் பாண்டியராஜ் சற்குணம், தாமோதரன் , அறநிலையத்துறை அலுவலர்கள்மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post கடலூர் முதுநகர் சவுடாம்பிகை அம்மன் கோயிலில் உடலில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Chautambikai Amman Temple ,Cuddalur ,Cuddalore ,Parvadavartini Sameda Ramanathiswara Chaudambikai Amman Temple ,Amman festival ,Chaudumbigai Amman Temple ,Cuddalur Mudunagar ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...