×

இலங்கையை வங்கதேசம் வீழ்த்தியது

டல்லாஸ்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குசல் மெண்டிஸ் 10 ரன், அடுத்து களம் இறங்கிய காமிந்து மெண்டிஸ் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து பதும் நிசாங்காவுடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் பதும் நிசாங்கா 47 ரன்னிலும் அடுத்து வந்த சரித் அசலங்கா 19 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 47 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேசம் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தன்சின் ஹாசன் 3 ரன், சவும்யா சர்க்கார் 0 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து லிட்டன்தாஸ் 36, கேப்டன் நஸ்முல் 7, தவுஹித் 40, மஹ்மத்துல்லா 16 ரன் எடுத்தனர். இறுதியில் வங்கதேசம் அணி 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் எடுத்து இலங்கையை வீழ்த்தியது.

 

The post இலங்கையை வங்கதேசம் வீழ்த்தியது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Sri Lanka ,Dallas ,T20 World Cup cricket ,Padum Nisanga ,Kusal Mendis ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்