×

முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்

 

முத்துப்பேட்டை, ஜூன் 8: முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலாளர் ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை பணிகள் தரமற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை திமுக பிரமுகர் ஆதரவுடன் அதிமுக ஒப்பந்தக்காரர்கள் போடுகின்றனர் என உள்ளிட்ட பல்வேறு அவதூறான வார்த்தைகளை சுட்டிக்காட்டி ஓவரூர் இளைஞர் பாசறை என்ற பெயரில் சில தினங்களுக்கு முன்பு ஓவரூர், சங்கேந்தி, எடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவோடு இரவாக துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.

இதனையடுத்து திமுக பிரமுகர் காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து கீழப்பெருமழை ஊராட்சி செயலராக பணியாற்றும் பிரஸ்னேவ் என்பவரை நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் பிரஸ்னேவ் நேற்று மாலை போலீசாரை கண்டித்து பாண்டி கோட்டகம் கிழக்கு கடற்கரை சாலையில் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 30பேருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பின்னர் விடுவித்தனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியது. இந்தநிலையில் ஊராட்சி செயலரான ஒரு அரசு பணியாளரே சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Muthuppet ,Muthupet ,Overur ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...