×

வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா

 

வலங்கைமான், ஜூன் 8: வலங்கைமான் அரசினர் பலவகை தொழில் நுட்ப கல்லூரி 2024ம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் உள்ளகூட்ட அரங்கில் சென்னை தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் ஆண்டு மலர் 2024 ஐ வெளியிட்டார். முதல் பிரதியை கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் பெற்றுக் கொண்டார்.

வெளியீட்டின் போது முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம. வேல்முருகன், முதலாண்டு துறைத்தலைவர் முருகன், தேர்வு அறைப்பொறுப்பாளர் உதயசங்கர், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.பாலாஜி, உடற்கல்வித்துறை இயக்குநர் அகஸ்டின் ஞானராஜ் ஆகியோர் உடனிருந்தனர். நிதி ஆலோசகர் கீதா, உதவி இயக்குநர் நிஷா, மண்டல அலுவலர் ரங்கநாதன், இயக்குநரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தொழில்நுட்ப உதவியாளர் லாவண்யா, பாடத்திட்டப் பொறுப்பாளர் திலகராஜ், தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோருக்கும் ஆண்டு மலர் வழங்கப்பட்டது.

The post வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Valangaiman Government Polytechnic College Annual Flower Release Ceremony ,Valangaiman ,Valangaiman Government Polytechnic College ,2024 ,launch ceremony ,Tiruvarur District Valangaiman ,Toshuvur Government Polytechnic College Campus Chennai Industry ,annual flower launch ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்...