×

பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

 

கும்பகோணம், ஜூன் 8: கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றுதல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் தலைமை வகித்து கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்தும்,

கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்னர் கட்டிய ஊரக வீடுகள் பழுது பார்க்கும் பணிகள் தேர்வு செய்வது குறித்தும் விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மாலதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Papanasam Union ,Kumbakonam ,Artist ,House ,Panchayat Union Office ,Thanjavur District ,Dinakaran ,
× RELATED தங்கையை காதலித்ததால் அதிமுக...