×

கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷ பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

 

கறம்பக்குடி, ஜூன் 8: கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷ பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. தொழிலாளி. இவரது வீட்டிற்குள் விஷ பாம்பு மறைந்து இருப்பதாக கறம்பக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அடுத்து தீயணைப்பு துறையினர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த விஷ பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள வன பகுதிக்குள் விட்டனர். விஷ பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.

The post கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷ பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : fire department ,Karambakudi ,fire ,Velusamy ,Karambakudi North Street ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு