×

செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 8: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர்கோயிலில் ஏகாம்பரேஸ்வரர் விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை கால பைரவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாசகம் முற்றோதலில் திருமுதுகுன்றம் எனக் கூறப்படும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்தும் ஆண்டிமடம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியானது நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvasakam Temple ,Senguandapuram Ekampereswarar Temple ,Jayankondam ,Shivandiyars' ,Thiruvasakam Murothal ,Sengundapuram ,Jayangondam, Ariyalur district ,Kampareswarar ,Vinayagar Murugan ,Kala Bhairavar ,Ekampereswararkoil ,Chengundapuram ,Jayangondam ,Thiruvasagam Murodal ,Sengundapuram Ecompreswarar Temple ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...