×

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்

 

அரியலூர், ஜூன் 8: தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதால் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்றும், அன்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2024ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுற்றதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் குறைகளைகளைக் களைந்திட பிரதி வாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மனுக்கள் பெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர் வரும் ஜூன் 10 காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறுமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Collector's Office ,Ariyalur ,Ariyalur collector ,Ariyalur collector's ,office ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம்