×

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

 

நாகப்பட்டினம்,ஜூன்8: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் நாகப்பட்டினம் கலெக்டர் தலைமையில் வரும் 10ம் தேதி முதல் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் நடந்து வந்த பொது மக்கள் குறைத்தீர் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் வரும் 10ம் தேதி திங்கள் முதல் வழக்கம் போல் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தின் முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Janidam Varghese ,redressal ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் கறவை மாடு கடன்பெற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது