×

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

 

போடி, ஜூன் 8: போடி சிலமலை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் தனியார் அமைப்பும் சேர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா பள்ளி தலைமையாசிரியர் அமுதா தலைமையில் நடந்தது. இந்நிகழ்வின் போது பள்ளியின் வளாகம் முழுவதும் சுற்றுச்சூழல் காக்கவும், தூய்மையான காற்று பெறவும், மழை வளம் பெருகவும், வேம்பு, குமிழ், பாதாம், இலுப்பை, மூங்கில், சக்கை பழம் போன்ற மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பவுண்டேசன் செயலாளர் சுந்தரம், உறுப்பினர் சேகர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ராஜாமணி, ஓவிய ஆசிரியர் மனோகரன், பசுமைப் பங்காளர் அமைப்பின் நிறுவனர் பனை முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி மேலாணமைக் குழு உறுப்பினர் கணேசன், ஆசிரியைகள் விஜயா, ஜெயலட்சுமி விவசாயிகள் அய்யம்பெருமாள், சுப்புராஜ், தோட்ட பராமரிப்பாளர் மொட்டையசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Tree sapling ceremony ,Govt ,Bodi ,World Environment Day ,Chilamalai, Bodi ,Amuda ,Tree sapling ceremony in ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்ற 3 பேர் கைது